16 April 2019

என் மீட்பர் உயிரோடிருக்கையிலே எனக்


எனக்கென்ன குறைவுண்டு?

208. (246) பியாக்                                          ஆதி தாளம்

பல்லவி
            என் மீட்பர் உயிரோடிருக்கையிலே எனக்
            கென்ன குறைவுண்டு? நீ சொல், மனமே.

சரணங்கள்
 1.         என்னுயிர் மீட்கவே தன்னுயிர் கொடுத்தோர்,
            என்னோடிருக்கவே எழுந்திருந்தோர்;
            விண்ணுல குயர்ந்தோர், உன்னதஞ் சிறந்தோர்,
            மித்திரனே, சுகபத்திர மருளும். - என்

2.         பாபமோ, மரணமோ, நரகமோ, பேயோ,
            பயந்து நடுங்கிட ஜெயஞ் சிறந்தோர்,
            சாபமே தீர்த்தோர் சற்குருநாதன்;
            சஞ்சலமினியேன்? நெஞ்சமே, மகிழாய். - என்

3.         ஆசிசெய்திடுவார், அருள்மிக அளிப்பார்,
            அம்பரந் தனிலெனக்காய் ஜெபிப்பார்;
            மோசமே மறைப்பார், முன்னமே நடப்பார்;
            மோட்சவழி சத்யம் வாசல் உயிரெனும். - என்

4.         கவலைகள் தீர்ப்பார், கண்ணீர் துடைப்பார்,
            கடைசிமட்டுங் கைவிடா திருப்பார்;
            பவமனிப்பளிப்பார், பாக்கியங் கொடுப்பார்,
            பரம பதவியினுள் என்றனை எடுப்பார் - என்

5.         போனது போகட்டும், புவிவசை பேசட்டும்,
            பொல்லான் அம்புக ளெய்திடட்டும்,
            ஆனது ஆகட்டும், அருள்மழை பெய்திடும்,
            அன்புமிகும் பேரின்ப மெனக்கருள் - என்

- ஞா. சாமுவேல்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...