வேத புத்தகமே வேத புத்தகமே


வேத புத்தகம் விலைபெற்ற செல்வம்

245. (358) செஞ்சுருட்டி                           ஆதி தாளம்

பல்லவி
            வேத புத்தகமே, வேத புத்தகமே,
            வேத புத்தகமே, விலை பெற்ற செல்வம் நீயே.

சரணங்கள்
1.         பேதைகளின் ஞானமே,-பெரிய திரவியமே,
            பாதைக்கு நல்தீபமே,-பாக்யர் விரும்புந் தேனே! - வேத

2.         என்னை எனக்குக் காட்டி-என் நிலைமையை மாற்றிப்,
            பொன்னுலகத்தைக் காட்டிப்-போகும் வழி சொல்வாயே. - வேத

3.         துன்பகாலம் ஆறுதல்-உன்னால்வரும் நிசமே
            இன்பமாகுஞ் சாவென்றாய்-என்றும்நம்பின பேர்க்கே. - வேத

4.         பன்னிரு மாதங்களும்-பறித்துண்ணலாம் உன்கனி;
            உன்னைத் தியானிப்பவர்-உயர்கதி சேர்ந்திடுவார். - வேத

- அருளானந்தம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு