தந்தேன் என்னை இயேசுவே


தந்தேன் என்னை இயேசுவே

219. தேவகாந்தாரி                                         ரூபக தாளம்
பல்லவி
            தந்தேன் என்னை இயேசுவே,
            இந்த நேரமே உமக்கே.

அனுபல்லவி
            உந்தனுக்கே ஊழியஞ்செய்யத்
            தந்தேன் என்னைத் தாங்கியருளும்! - தந்தேன்

சரணங்கள்
1.         ஜீவ காலம் முழுதும்
            தேவ பணி செய்திடுவேன்,
            பூவில் கடும் போர் புரிகையில்
            காவும்! உந்தன் கரத்தினில் வைத்து. - தந்தேன்

2.         உலகோர் என்னை நெருக்கிப்
            பலமாய் யுத்தம் செய்திடினும்,
            நலமாய் சர்வ ஆயுதம் பூண்டு
            நானிலத்தினில் நாதா, வெல்லுவேன். - தந்தேன்

3.         உந்தஞ் சித்தமே செய்வேன்,
            என்றன் சித்தம் ஒழித்திடுவேன்,
            எந்த இடம் எனக்குக் காட்டினும்,
            இயேசுவே, அங்கே இதோ! போகிறேன். - தந்தேன்

4.         கஷ்டம் நஷ்டம் வந்தாலும்,
            துஷ்டர் கூடிச் சூழ்ந்திட்டாலும்,
            அஷ்டதிக்கும்[1] ஆளும் தேவனே,
            அடியேன் உம்மில் அமரச்செய்திடும்! - தந்தேன்

5.         ஒன்றுமில்லை நான் ஐயா!
            உம்மாலன்றி ஒன்றும் செய்யேன்;
            அன்று சீஷர்க்களித்த ஆவியால்
            இன்றே அடியேனை நிரப்பும்! - தந்தேன்

- வே. சந்தியாகு


[1] எட்டுத் திசைகள்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு