தேவ வசனத்தையே நீராவலுடன்
தேவ வசனத்தையே
248. (59 L.) உசேனி ரூபக
தாளம்
பல்லவி
தேவ வசனத்தையே நீராவலுடன்
கேட்டதனின்
செய்கைக்காரருமாகுங்களேன்
செவ்வையாவே. - தேவ
சரணங்கள்
1. செய்கையற்ற கேள்விக்காரன் மெய்யாய்த் தன்னிலை
மறந்தான்
ஐயோ அவன் நிர்ப்பாக்கியனே, அருளில்லானே.
- தேவ
2. பூரண விடுதலையின் ஆரணந்தன்னில் நிலைத்துத்
தாரணியில் நற்செய்கையுள்ளோன் தகுபாக்கியனே.
- தேவ
3. தேவமகிமை நவிலும் நாவையடக்காமலே தான்
தீங்குற இதயம் எத்துவோன், தெய்வபத்தி யவம்.
- தேவ
4. அநாதர் விதவைகளை ஆதரித்துல காற்கறை
அணுகாது காப்பதே பத்தி அம்பர தந்தை முன்.
- தேவ
5. கிருபை விண்ணப்பங்களின் திரு ஆவியை யூற்றுவன்
பிதாவை யாவியுண்மையிலும் சதா பணிவீர்.
- தேவ
-
ல. யோசுவர்
Comments
Post a Comment