16 April 2019

துங்கனில் ஒதுங்குவோன் பங்கமின்றித்


பங்கமின்றித் தங்குவான்

228. (257) சங்கராபரணம்                                ஆதி தாளம்

பல்லவி

          துங்கனில் ஒதுங்குவோன் பங்கமின்றித் தங்குவான்

அனுபல்லவி

            கங்குல் பக லும்பரனார் காவல் அர ணாதலால். - துங்

சரணங்கள்

1.         வேடன் கண்ணி குத்துங்கால், விக்கினங்கள் சுற்றுங்கால்,
            மூடி உனைக் காப்பரே, ஒர் மோசமின்றிச் சேர்ப்பரே. - துங்

2.         பக்கத்திலே ஆயிரம், பாலே பதினாயிரம்
            சிக்கென வீழ்ந்தாலுமே, தீங்குனை அண்டாதுகாண். - துங்

3.         கண்ணினாலே பார்க்குவாய், கடவுள் செயல் நோக்குவாய்;
            அண்ணலே உன் அடைக்கலம், ஆண்டவர் உன் தாபரம். - துங்

4.         தீங்குனை அண்டாமலும், தீனங்கள் தீண்டாமலும்,
            பாங்கு தூதர் காபந்தில் பத்திரமாய் வாழ்வையே. - துங்

5.         பாதம் கல்லிட றாமல், பகைவர் உக்ரம் மீறாமல்,
            தூதர் உனைக் கைகளில் தூக்கி ஏந்திக் கொள்வரே. - துங்

6.         நீடுநாட்களாகவே கேடு துன்பம் போகவே,
            வீடுபரதீசினில் சூடுவான் மா மகிமைகள். - துங்

- த. யோசேப்பு

2 comments:

  1. Who is த. யோசேப்பு?

    ReplyDelete
    Replies
    1. பாடல் எழுதியவரின் பெயர்
      த. யோசேப்பு அவரின் ஊர் நெய்யூர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

      Delete

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...