பக்தியாய் ஜெபம் பண்ணவே


நல்சித்தம் ஈந்திடும் இயேசுவே

218. தேசிகதோடி                                          சாபு தாளம்

1.         பக்தியாய் ஜெபம் பண்ணவே
            சுத்தமாய்த் தெரியாதய்யா!
            புத்தியோடுமைப் போற்ற, நல்
            சித்தம் ஈந்திடும், யேசுவே!

2.         பாவ பாதையைவிட்டு நான்
            ஜீவ பாதையில் சேர, நல்
            ஆவி தந்தெனை ஆட்கொளும்,
            தேவ தேவ குமாரனே!

3.         பொய்யும் வஞ்சமும் போக்கியே
            மெய்யும் அன்பும் விடாமல், யான்
            தெய்வமே, உனைச் சேவித்திங்
            குய்யும்[1] நல்வரம் உதவுவாய்.

4.         அப்பனே! உனதன்பினுக்
            கெப்படிப் பதில் ஈட்டுவேன்?
            செப்பும் என்னிதயத்தையே
            ஒப்படைத்தனன் உன்னதே.

5.         சிறுவன் நானுனைச் செவ்வையாம்
            அறியவும், முழு அன்பினால்
            நிறையுமுள்ள நிலைக்கவும்
            இறைவனே! வரம் ஈகுவாய்.

6.         அண்ணலே! உனதாலயம்
            நண்ணி, நல்லுணர்வோடுனை
            எண்ணி யெண்ணி இறைஞ்ச, உன்
            கண்ணில் இன்னருள் காட்டுவாய்.

- ஹெ.ஆ. கிருஷ்ணன்


[1] பிழைக்கும்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு