தினமே நானுனைத் தேடிப்பணியச்
தினமே நான் உன்னைத் தேடிப் பணிய
209. சுத்தபங்களா ஆதி
தாளம்
பல்லவி
செயும்துணையே நித்ய ஏக தெய்வமே.
அனுபல்லவி
மாசிலானே அனுகூலநற் கோனே. - தின
சரணங்கள்
ஆதியாய் நின்றபேர் அருள்நிறை பாசா,
மருள்பவ நாசா, மனுக்குல ராசா,
மகிமை யடைந்தமா மகத்துவ நேசா! - தின
2. செத்தேன், எனக்குன் ஜீவன் அளித்தாய்,
தீயனென் மேல் திருத் தீர்த்தம் தெளித்தாய்,
முத்தேயென் நன்மைக் காக மரித்தாய்,
மோதிய தீவினை யாவும் அழித்தாய். - தின
3. திரளென் பாவங்கள் தீர்த்திட வாராய்,
தீமை மறந்துநான் சீர்பெறக்கூராய்,
கரள் குணமாற்றிக் கனிந்தெனைச் சேராய்,
களிப்புடன் பாடிடக் கறுணைக்கண் பாராய்.
- தின
-
சா. பரமானந்தம்
Comments
Post a Comment