பாதைக்கு தீபமாமே


பாதைக்கு தீபம்

246. (143) மோகனம்                      ஏகதாளம்

பல்லவி
                   பாதைக்கு தீபமாமே
                   பரிசுத்த ஆகமம்-மா நல்ல

சரணங்கள்
1.         பாதைக்கு தீபமே, பாவிக்கு லாபமே,
            பேதைக்குத் திரவியமே, பரிசுத்த ஆகமம். - மா நல்ல

2.         தேனின் மதுரமே, திவ்ய அமுதமே
            வான பிதாவின் வாக்கே பரிசுத்த ஆகமம். - மா நல்ல

3.         நீதியி னாதாரமே, நெறியுள்ளோர் செல்வமே,
            ஜாதிகள் மேன்மையாமே பரிசுத்த ஆகமம். - மா நல்ல

4.         ஞான சமுத்திரமே, நல்ல சுமுத்திரையே.[1]
            ஈனர்க்கும் ஆதரவே பரிசுத்த ஆகமம். - மா நல்ல

5.         உலகோர்க் குயிர்துணை, உண்டோ அதற்கிணை?
            அலகையை வெல்லுங்கணை பரிசுத்த ஆகமம். - மா நல்ல

6.         எல்லையில்லா விஸ்தாரம், எவர்க்கும் பர மாகரம்,
            வல்ல பரனின் வேதம் ஆகமம். - மா நல்ல
- யாழ்பாணம் அருளானந்தம்


[1] சரியளவு

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு