16 April 2019

தேன் இனிமை யதிலும் சத்திய வேதம்


சத்திய வேதம் திவ்யமான மதுரம்

244. (142) சங்கராபரணம்                                ஆதி தாளம்

பல்லவி

                   தேன் இனிமை யதிலும் சத்திய வேதம்
                   திவ்யமான மதுரம்.

அனுபல்லவி

                        ஞானமது நிறையும் வேதமதில் எனக்கு,
                        நாதனே, அருள்ஆசை அனுதினம் ருசித்திட. - தேன்

சரணங்கள்

1.         ஆரணம் அதி புனிதம் களங்கம் இல்
            லாத சுகிர்த அமுதம்;
            பூரணமாய் அதைத் தான்உட்கொண்டே வரில்,
            பொன்னுல கதற் கேற்ற தன்மை உண்டாக்குமே. - தேன்

2.         பாதைக்குரிய தீபம்; மெய் வேதம்
            பற்றிடில் மிகு லாபம்;
            வாதை செய்திடும் பல சோதனைகளும் எதிர்
            வரில் அனைத்தும் வெல்லத்தகும் படைக்கல[1] மதே. - தேன்

3.         விண்ண தழிந்தாலும், அதோ டிந்த
            மேதினி ஒழிந்தாலும்,
            திண்ண மதாய் என்றும் சிறந்திலகும் ஜீவ
            திருமறை எனில் தங்கிப் பலன் தர அனுக்ரதி - தேன்

4.         எத்திசையிலுமுள்ள நரர் யாவரும்
            ஏகன் நின் அறிவு கொள்ள,
            சுத்த சுவிசேஷம் துலங்கிப்ர காசிக்கத்
            தூய நல் ஆவியை யாவர்க்கும் ஈந்தருள். - தேன்
- யோ. பால்மர்


[1] பேராயுதம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...