தேவாதி தேவே நீரே சேவிக்கில்


ஜீவாமிர்தம் தருவீரே

264. (272) ஆனந்தபைரவி                              ஆதிதாளம்

பல்லவி
            தேவாதி தேவே, நீரே-சேவிக்கில் உமை,
             ஜீவார்தம் தரு வீரே

அனுபல்லவி

            ஈவாகிய தயவை நாவாலும் நயம்பெறப்
            பாவாலும் எவர்முனும் ஓவா[1] தறிக்கைசெய்து - தேவாதி

சரணங்கள்

1.         நன்றே, அருள் என்றே கொலைக்குச் சென்றாய்;-மரித்
            தன்றே நீ பேயை முற்றும் வென்றாய்;
            நின்றே இவ்வுலகினில் அன்றாடகவே நம்பி,
            நேசா, விஸ்வேசா, இராசா, சருவ ஜீவ - தேவாதி

2.         பொல்லா உலகம் அல்லோ? இதனில் செல்லா,-துணை
            நல்லாயனே, என்பேன்; வல்லாய்,
            சல்லாப[2] நூலில் அதி உல்லாச மேவி நிதம்
            தாயா,[3] மாதூயா, நன்னேயா, சுரர்கள் பதி - தேவாதி

3.         பண்டே[4] மறைகை கொண்டே, இதயந் தொண்டே-புரிந்
            தண்டே[5] வரும் உதவி உண்டே;
            விண்டே[6] குறைகளும் தண்டை சுகிர்தமாகும்;
            வேதா, என் தாதா,[7] அதீதா, மகத்வமான - தேவாதி

- ஆ. அல்வின்


[1] ஓயாது
[2] சரசம்
[3] தாய் போன்றவனே
[4] முற்காலம்
[5] அருகில்
[6] பிரிந்து
[7] உபகாரா

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு