அன்பே பிரதானம் சகோதர
அன்பே பிரதானம்
251. (205) கமாஸ் ஆதிதாளம்
பல்லவி
அன்பே பிரதானம்,-சகோதர
அன்பே பிரதானம்.
சரணங்கள்
1. பண்புறு ஞானம்,-பரம நம்பிக்கை,
இன்ப விஸ்வாசம்,-இவைகளி லெல்லாம். - அன்பே
2. பலபல பாஷை-படித்தறிந்தாலும்,
கலகல வென்னும்-கைமணியாமே. - அன்பே
3. என் பொருள் யாவும்-ஈந்தளித்தாலும்,
அன்பிலையானால்-அதிற்பயனில்லை. - அன்பே
4. துணிவுட னுடலைச்-சுடக்கொடுத்தாலும்,
பணிய அன்பில்லால்-பயனதிலில்லை. - அன்பே
5. சாந்தமும் தயவும்-சகல நற்குணமும்
போந்த சத்தியமும்-பொறுமையுமுள்ள. - அன்பே
6. புகழிறு மாப்பு,-பொழிவு[1] பொறாமை,
பகைய நியாயப்-பாவமுஞ் செய்யா. - அன்பே
7. சினமடையாது,-தீங்கு முன்னாது,
தினமழியாது,-தீமை செய்யாது. - அன்பே
8. சகலமுந் தாங்கும்,-சகலமும் நம்பும்,
மிகைபட வென்றும்-மேன்மை பெற்றோங்கும்.
- அன்பே
-
ச.பே. ஞானமணி
Comments
Post a Comment