எந்த
வேளையும் அடியனோடிரும்
212. (235) புன்னாகவராளி சாபுதாளம்
பல்லவி
ஆதி யாம்
மகா ராசனே,-எந்த வேளையும்
அடிய னோடிரும், ஈசனே
அனுபல்லவி
தீதில்லா சருவேசா, தேசுறும்[1] பிரகாசா,
பாதகன் யான் மிகு பலவீனன் ஆனதால், - ஆதியாம்
சரணங்கள்
1. பாவி பெலனால், ஐயனே,-நின்றால் என்னைப்
பகைவர் ஜெயிப்பார், மெய்யனே;
தேவா, துணை நீர் ஐயனே;-சிறியனிடம்
சேர்ந்தே வசியும், துய்யனே[2],
மேவும் தஞ்சம் எனக்கு வேண்டும், காவலன்
நீரே;
சாவுவரையும் என்னைத் தாங்கி அரவணையும். - ஆதியாம்
2. இரக்கம் பொழிய வாருமே,-கிருபையாக,
இறைவா, என்னிடம் சேருமே;
உருக்கம் நிறைந்த நீருமே;-அனவரதம்[3]
உந்தம் அருளைத் தாருமே;
செருக்காய் எம் மீதி கலோர்[4] சேதம்
செய்ய நினைக்கும்
திருக்கை[5] அகற்றி
என்னில் தினமும் அருள்புரியும். - ஆதியாம்
- ச. யோசேப்பு
No comments:
Post a Comment