20 April 2019

ஆண்டவர் பங்காகவே தசம பாகம்

கி.கீ:273

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                             தசம பாகம் தாரும்

 

273. (300) பியாகு                                                   ரூபகதாளம்

 

                             பல்லவி

 

          ஆண்டவர் பங்காகவே, தசம பாகம்,

            அன்பர்களே, தாரும்;-அதால் வரும்

            இன்பந்தனைப் பாரும்.

 

                             அனுபல்லவி

 

                        வான்பல கணிகளைத் திறந்தாசீர்

                        வாதங்கள் இடங்கொள்ளாமற் போகுமட்டும்

                        நான் தருவேன், பரிசோதியுங்களென்று

                        ராஜாதிராஜ சம்பூரணர் சொல்வதால். - ஆண்டவர்

 

                             சரணங்கள்

 

1.         வேதாளராஜன் அருஞ்சிறை மீட்டாளும்

            விண்ணவர் கோமானே-அந்த

            மேதகத்தை[1] நன்றி ஞாபகஞ் செய்திட

            விதித்தது தானே,

            வேதனம்[2] வியாபாரம், காலி[3], பறவையில்,

            வேளாண்மை, கைத்தொழில், வேறு வழிகளில்,

            ஊதியமாகும் எதிலும் அவர் பாகம்

            உத்தமமாகப் பிரதிஷ்டை பண்ணியே. - ஆண்டவர்

 

2.         ஆலயங் கட்ட, அருச்சனை செய்ய,

            அதற்குளதைப் பேண,-தேவ

            ஊழியரைத் தாங்கி உன்னத போதனை

            ஓதும் நன்மை காண,

            ஏழைகள், கைம்பெண்கள், அனாதைப் பாலகர்கள்,

            ஏதுகரமற்ற[4] ஊனர், பிணியாளர்,

            சாலவறிவு நாகரீக மற்றவர்

            தக்க துணைபெற்றுத் துக்கமகன்றிட - ஆண்டவர்

 

3.         நம்மைப் படைத்துச் சுகம் பெலன் செல்வங்கள்

            யாவும் நமக்கீந்து,-நல்ல

            இம்மானுவே லென்றொரு மகனைத் தந்து

            இவ்வா றன்புகூர்ந்து,

            நன்மை புரிந்த பிதாவைக் கனம்பண்ண

            நம்மையும் நம்முட யாவையு மீந்தாலும்

            சம்மததே அதிலும் தசம பாகம்

            தாவென்று கேட்கிறார்; மாவிந்தை யல்லவோ? - ஆண்டவர்

 

- அருள்திரு. ஜி.சே. வேதநாயகம்

 

 

https://www.youtube.com/watch?v=NOhCBzrVge4

https://www.youtube.com/watch?v=RTRV3ZRxv54



[1] மேன்மை

[2] சம்பளம்

[3] கால்நடைகள்

[4] வழியற்றவர்கள்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...