வான நகரத்தின் மேன்மையென
வான நகரத்தின் மேன்மையென சொல்லுவோம்
281. (348) காம்போதி ஆதிதாளம்
பல்லவி
வலன்
நலவருக்கருள்.
சரணங்கள்
பன்னிரு முத்துக்கள் தெரு பொன்னின்மயமே;
தேனிலும் மதுரம் தெளிவிற் பளிங்கதான ஆறும்
ஜீவதருவும் இருக்கும் செப்பரும் அழகதான.
- வான
2. அங்குநோய், துன்பம், விசாரம், அக்ரமம், கண்ணீர்,
தரித்திரம்
அற்பமு மிருப்பதில்லை, சொற்பமாகிலும்
பொங்கியே முச்சத்துருக்கள் போரினுக் கிழுப்பதில்லை,
புண்ணியனார் சொன்னதிரு உன்னத எருசலையாம்.
- வான
3. அந்நகர்க் குடிகள் வெண்மையான அலங்காரமான
அர்ச்சய உடுப்பு, சிரமானதிற் கிரீடம்
மன்னவர் போலே அணிந்து மகிமையி னாசனத்தில்
வாய்மையாக வீற்றிருப்பர்; தூய்மையான அந்த
நல் - வான
4. நேயமுற்பிதாக்கள், தீர்க்கர், நின்மலன் அப்போஸ்தலர்கள்,
நீதிமான்கள், எல்லவரும் தூதர் நல்லோரும்
ஓய்வின்றித் தோத்ர கீத உச்சிதத் தொனிமுழக்கி
உன்னதனைப் போற்றுவார்கள்; பன்னரும் சிறப்பதுள்ள
- வான
-
ஞா. சாமுவேல்
Comments
Post a Comment