16 April 2019

அருமையுற நீ இறங்கி அடியனுள

கி.கீ:224

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   உதவு நதியாக வந்த பெருமானே

 

224. கேதாரகௌளம்                                       கண்டசாபு தாளம்

 

                             திருப்புகழ்

 

1.       அருமையுற நீ இறங்கி அடியனுள மீது தங்க,

            அணுவளவிலாது பங்கம்-அகன்றோடும்;

            அருளொளி அன்பே யுறைந்து அதிகவுயர்வாய் வளர்ந்த

            அகமுழுதுமே நிறைந்து-வழிந்தோடும்.

 

2.         திருவரசுன் சீர்குணங்கள் இனிய திருவாசகங்கள்

            திவிய வரமாக வந்து-எனதாகும்;

            தினமுமெழிலாயிலங்கி எனதகமுமே கனிந்து

            சிறுமை செயும் 'நான்' மறைந்து-பறந்தோடி.

 

3.         மருவு கிறிஸ்தேசுன் அன்பும் அமருமழகான இன்பும்

            மலர் முக சந்தோஷ பண்பும்-சுடரா

            மகிமையும் நின்னோடுவந்த எனதிதயமே நிரந்து,[1]

            வளமை வரவே விளைந்து-நிலையாக.

 

4.         உரிமையுடனே உவந்து மனமதியெலாங் கவர்ந்து,

            உனதடிமையாய்ப் பரிந்து-எனையாளாய்!

            உனதசுனையாய்ச்[2] சுரந்து அடியருளமே விரிந்து,

            உதவு நதியாக வந்த-பெருமானே!

 

 

­- நாராயண வாம திலகர் சந்தியாகு



[1] நிறைந்து

[2] உயர்ந்த மலையூற்றாய்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...