ஞான சுவிசேஷமே


ஞான சுவிசேஷமே

247. (144) பிலஹரி.                                                 ஆதி தாளம்

பல்லவி 
                   ஞான சுவிசேஷமே
                   நன்மை தரும் நேசமே

அனுபல்லவி

                        ஞான உபதேசமே, வளரும் விசுவாசமே, - ஞான

சரணங்கள் 
1.         சத்திய வாக்கியமே, சந்தோச பாக்கியமே,
            புத்தியா ரோக்கியமே, புண்ணிய சிலாக்கியமே. - ஞான

2.         நீதிப் பிரசங்கமே, நிமலன் அருள் தங்கமே,
            சோதிமிகும் துங்கமே,[1] துதிபெருகும் பொங்கமே,[2] - ஞான

3.         அஞ்ஞானத்தை அழிக்கும், அலகையிடர் ஒழிக்கும்,
            மெய்ஞ்ஞானத்தை அளிக்கும், விளங்கி என்றும் செழிக்கும், - ஞான

4.         யேசுஅண்டையில் சேர்க்கும், எல்லா இடரும் நீக்கும்,
            பேசும் பவத்தைப் போக்கும், பேதைமையோரைக் காக்கும் - ஞான

- யோ. பால்மர்



[1] தூய்மை
[2] பொலிவு

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு