ஜெபம் மறவாதே நேசனே


ஜெபம் மறவாதே நேசனே

240. கமாஸ்                                                  ஆதி தாளம்

பல்லவி
          ஜெபம் மறவாதே நேசனே-எக்காலமும் நீ!

சரணங்கள்
1.         ஜெபம் பரமனுடன் பேச்சு;
            தேவை யெல்லாம் அத்தா லாச்சு;
            தப விசுவாசி மூச்சு;
            தகாதெலாம் அத்தால் போச்சு. - ஜெப

2.         அம்பரன் கற்பனை நோக்கு;
            அவரதருமை வாக்கு;
            நம்பிச் சந்தேகம் போக்கு;
            நலம் வரத் தீமை நீக்கு. - ஜெப

3.         பேயை ஜெபத்தோடு வென்ற,
            பிரிய நாமமுங் கொண்ட,
            நேய சுதன்தனைத் தந்த,
            நின் மலனுக்கே யுகந்த. - ஜெப

4.         விசுவாச நேசத்தோடு
            மிகும் பக்தியோடு நாடு;
            நிச்சயமாய் பரனைத் தேடு;
            நேர்மையுடனே ஓடு. - ஜெப

5.         பகலுடன் இரவிலும்,
            பணிவுடன் குறைவிலும்,
            திகிலிலும் மகிழ்விலும்,
            செல்வம் வறுமையிலும். - ஜெப

6.         தேவ அரசாட்சிக்காக
            ஜெபி, உன்றன் குறைபோக,
            ஆவலுடன் பிறர்க்காக
            அன்புடன் ஜெபிப்பா யாக. - ஜெப

- ஞா. சாமுவேல்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு