நல்லாயன் இயேசு சாமி
நல்லாயன் ஆட்டுக்காய் உயிர் தாறார்
234. (254) பியாகடை ஏகதாளம்
பல்லவி
நல்லாயன்
யேசு சாமி, ராஜன்தாவீதுடை மகவு,-
ஒரே மகவு, ஆட்டுக்காய் உயிர் தாறார்.
சரணங்கள்
1. எல்லார்க்கும் பெரியான், எம்பிரான் தம்பிரான்,
ஏகவஸ்தோரே ஏகோவா,-மா
தேவ கிறிஸ்து நீ கா, வா, வா. - நல்
2. மன்னர் மன்னர் கொண்டாடிய நீடிய
வானப் பரமகு மாரா வோ,-அதி
ஞானத் திறம் மிகும் வீராவோ. - நல்
3. விண்ணாடர் முழங்க, மண்ணாடர் விளங்க,
மேவி வந்தமே சையாவே,-படு
பாவி சொந்தம் ஏ சையாவே. - நல்
4. சீராட்டுக் காட்டி எந்தையார், தந்தையார்
திருக்கடைக் கண்ணால் பார்த்தாரே;-வந்து,
திரும்பத் திரும்ப எனைச் சேர்த்தாரே. -
நல்
5. ஆட்டைக் கூட்டி ஓர் தொழுவத்தில் அடைப்பார்,
அரிய நல்ல மேய்ச்சல் கொடுப்பார்,-அன்
பாகத் தோளினிலே எடுப்பார். - நல்
- வே. சாஸ்திரியார்
Comments
Post a Comment