விசுவாசத்தால்
நீதிமான் பிழைப்பான்
226. (195) பங்காளா ஆதி தாளம்
பல்லவி
விசுவாசத்தால்
நீதிமான் பிழைப்பான்;-மெய்
விசுவாசமுள்ளவன்
தான் தழைப்பான்.
சரணங்கள்
1. நிசமாக நாம் பாவத்தினில் பிறந்தோர்;-முழு
விஷமான பாவத்தினால்
இறந்தோர். - விசு
2. உய்யும்[1] வகையறியோம்; பெலனேயில்லை;-நரர்[2]
செய்யும் கிரியைகளில் நலனேயில்லை. - விசு
3. பாவக் கடனொழிக்கப்
பலமே யற்றோம்;-எச்
சாபம் அழிவினுக்கும்
தகைமை யுற்றோம். - விசு
4. தேவன் கிருபையொன்றே
நமைப் பார்க்கும்;-அவர்
மாவன்பே பாவிகளின்
கடன் தீர்க்கும். - விசு
5. நீதிமானைக் குற்றஞ்சாட்ட
யாராலேயாகும்?-அவன்
பாதகம் பழிமரணம்,
யாவுமே போகும். - விசு
6. தேவனின் பிள்ளை நானென்றே
அவன் துள்ளுவான்;-தீய
பாவ வழிதனைப்
பகைத்தே தள்ளுவான். - விசு
- ஞா.
சாமுவேல்
YouTube Link
No comments:
Post a Comment