16 April 2019

ஆரணத் திரித்துவமே எமை

கி.கீ:211

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                             எமை ஆண்டருள்

 

211. (234) பியாகடை                                                        ரூபக தாளம்

 

                             பல்லவி

 

           ஆரணத்[1] திரித்துவமே,-எமை

            ஆண்டருள், மகத்துவமே.

 

                             அனுபல்லவி

 

                        பூரண தேவ பிதா, சுதன், ஆவியே,

                        பொன்னுலகத்தெழும் உன்னதமான

                        போத க்ருபையா பத்ததி[2] நீதிச் சுடரே, நித்திய - ஆரண

 

                             சரணங்கள்

 

1.         அன்றன்றை அப்பத்தைத் தாரும்;-எங்கள்

            ஆபத் தனைத்தையும் தீரும்;

            இன்றும் என்றெங்களைச் சேரும்;-திரு

            இரக்கத்தால் முகம் பாரும்;

            நன்றி கெட்டோர்களைக் கொன்று போடாதேயும்;

            நம்பரா, கருணாம்பரா,

            ஞானத் தனு மானத்தொளிர்

            மேன்மை திவ்விய பானத்தருள். - ஆரண

 

2.         மூவர் ஒன்றான யெகோவா,-உயர்

            முக்ய கிருபையின் தேவா,

            மேவி அடியாரைத் தேவா,-பல

            வெவ்வினையினின்றும் கா, வா;

            பாவிகள் நாங்கள் ஏவையின் மக்களே,

            பக் ஷமே[3], பரம பொக் ஷமே,

            பாடும்புகழ் நாடும்பரி

            வோடும் தயை நீடும்பரா! - ஆரண

 

 

 

- வேதநாயகம் சாஸ்திரியார்

 



[1] ஆரணம்-வேதம்

[2] ஒழுங்கு

[3] இரக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...