20 April 2019

ஆத்தும ஆதாயம் செய்குவோமே

கி.கீ:269

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   ஆத்தும ஆதாயம் செய்குவோமே

 

269. (275) பியாகு                                          ரூபகதாளம்

 

                             பல்லவி

 

                   ஆத்தும ஆதாயம் செய்குவோமே,-இது

                        ஆண்டவர்க்குப் பிரியம்;-நாமதினால்

                        ஆசீர்வாதம் பெறுவோம்,

 

                             அனுபல்லவி

 

            சாத்திரம் யாவும் தெரிந்த கிறிஸ்தையன்

            தஞ்சத்தைப் பெற்று நாமிந்த மாவேலையில்

            ஆத்திரமாக முயற்சி செய்வோமாகில்

            அற்புதமான பலனை அடையலாம். - ஆத்தும

 

                             சரணங்கள்

 

1.         பாழுலக முழுவதையும் ஒருவன் சம்

            பாதித்துக் கொண்டாலும்,-ஒரு

            நாளுமழியாத ஆத்துமத்தை அவன்

            நஷ்டப்படுத்தி விட்டால்,

            ஆளுந்துரையவ னாயிருந்தாலுமே,

            அத்தால் அவனுக்கு லாபமில்லை யென்று,

            ஏழை ரூபங்கொண்டு ஞாலமதில் வந்த

            எம்பெருமான் கிறிஸ்தேசன்று சொன்னாரே. - ஆத்தும

 

2.         கெட்டுப்போன ஆத்துமாக்களை ரட்சிக்க

            மட்டில்லா தேவசுதன்-வானை

            விட்டுலகில் கனபாடு பட்டு ஜீவன்

            விட்டதும் விந்தைதானே;

            துட்டை[1] யொருத்தியி னாத்துமத்தை மீட்க

            தூயபரன் முன்னோர் கிணற்றருகிலே

            இட்டமுடன் செய்த இரட்சண்ய வேலையை

            இந்த நிமிஷமே சிந்தையி லெண்ணியே. - ஆத்தும

 

 

- யே. ஞானமணி



[1] ஒழுக்கமற்றவள்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...