வெகு பேர்களுக் கின்பமான


தேட்டமாகினேன் இயேசுவே

278. (160 L.) முகாரி                                                சாபுதாளம்

கண்ணிகள்
1.         வெகு பேர்களுக் கின்பமான
                        மேதினியே நீ என்றனுக்கு
            மிகவும் திகில் கசப்பாம்பர
                        தேசம் இது மெய்யலோ?
            ஜெகந்தன்னைமா ஆசையாய்ப் பற்றும்
                        ஜெகத்தோரத்தால் வாழட்டும்,
            தேவரீருட பேரிலே மெத்தத்
                        தேட்டமாகினேன் யேசுவே.

2.         யேசு நீர் தரிசினை தந்தெனை
                        யேற்கும் நன்மைக்காய் யாவையும்
            எளியேன்வெறுத் திந்தலோகத்தின்
                        இன்பவாழ்வினைக் குப்பையாய்
            மோசமென்றுநா னெண்ணுவேன், நீரென்
                        மோட்சமும் கதி ஆஸ்தியும்,
            முன்னவா, அடியே னும்மோடென்றும்
                        முற்றுங்கூடினால் பாக்கியன்.

3.         இந்த ஏழைச் சரீரமாமண்ணை
                        இளைப்பாறிட மண்ணினில்
            ஏற்கவேகொண்டு போய்ப்புதைத்திடும்
                        காலம் எய்திடில் நல்லதே;
            அந்தநாளினி லெந்தன் பாடுகள்
                        அத்தனைக்கும் முடிவுண்டாய்,
            ஆவி உம்மிடம் தங்கப்போகுமே
                        ஐந்து காயத்தில் ஏசுவே.

4.         வாராய் நித்திரையின் தோழனே
                        சாவே என்னைக்கொண்டுபோ,
            வாகாய்கப்பல் தாவில்ஓட
                        வழியே திருப்பாயோ?
            பாரோர்திகி லானாயிந்த
                        பக்தன்மகிழ் வானாய்
            பரன்யேசுவின் பரஞ்சேரநற்
                        பாதை யெனக்கானாய்.

- ஞா. சாமுவேல்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு