ஏசு மகாராஜனை என்றும் துதித்துப் போற்றுவோம்


9          இராகம் (நேச ஏசுபாலனை நித்தம் துதித்து)

பல்லவி

                   ஏசு மகாராஜனை என்றும் துதித்துப் போற்றுவோம்

அனுபல்லவி

                  நேசமுடன் எம்மை மீட்க நீசவடிவானோனை - ஏசு

1.         சர்வேலோக நாதனை சகல பரிபாலனை
            அரூபரூப தேவனை அடியார்க்கனுகூலனை - ஏசு

2.         எத்தனையோ இடர்கள் துன்பம் சித்தம் இரங்கி காத்தோனை
            நித்தம் தயாபரனை முற்றும் கருணாகரனை - ஏசு

3.         உன்னதத்திலேகமாய் ஓய்வில்லாத நாதமாய்
            இன்னிசைந்த ராகமாய் இசைந்து பாடும் கீதமாய் - ஏசு

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே