தற்பரனே எனது மேய்ப்பர் தாழ்ச்சியை நானடையேன்
170. பல்லவி தற்பரனே எனது மேய்ப்பர் தாழ்ச்சியை நானடையேன் அனுபல்லவி மெய்ப்பரன் புல் தரையில் என்னை மேய்த்துக் காப்பாரே - மகா 1. ஊற்றின் சுத்த தண்ணீரண்டை சேர்த்திடுவாரே - என தாத்துமத்தின் தாகமெல்லாம் அமரச் செய்வாரே 2. தம்நாம நிமித்தமெனில் தயவுவைப்பாரே - வெகு செம்மையுள்ள வழியிலென்கால் செல்லச்செய்வாரே 3. மரணநிழல் பள்ளத்தில் நான் வழி நடந்தாலும் - என்னை பரன் காப்பார் மோசத்த...