நற்கருணைத் திரு விருந்தை நாடுஞ்

நற்கருணைத் திரு விருந்தை நாடுஞ்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

294. இராகம்: உசேனி                                       ஆதி தாளம் (462)

 

                             பல்லவி

 

          நற்கருணைத் திரு விருந்தை நாடுஞ் சகோதரரே,

          நம்மை மீட்ட ரட்சணியத்தைப் பாடுஞ் சகோதரரே.

 

                             அனுபல்லவி

 

            சற்குருவா யுலகில் வந்து சஞ்சரித்துக் குருசில் நொந்து

            சரீரம் நொறுங்குண்ண நைந்து தளர்ந்தெமக்காய் சோரிசிந்து[1] - நற்கரு

 

                             சரணங்கள்

 

1.         பரமகுரு சீடரோடும் பந்திதனிலிருந்து

            பாடுபடுமுன் ரா வனுபவித்த திருவிருந்து

            வரமிது பாவப்பிணிக்கு வகுத்த வொரேயொரு மருந்து;

            வாருங் கூடிவாருமே கவன மாயிங்கே பொருந்து - நற்கரு

 

2.         அப்பமெடுத்தாசீர்வதித் தவர்கள் கையிற் கொடுத்து

            அருந்துமிதை யென்சரீர மாமென்றுரை தொடுத்துச்

            செப்பி, என்னை நினைப்பதற்காய்ச் செய்யுமென்றாருரை தடுத்து,

            தேவ முனிவடையாமற்[2] செறி[3] அதிகந் தனைவிடுத்து - நற்கரு

 

3.         பாத்திரத்தை கையேந்தித் தோத்திரஞ் செய்தென்று

            பருகுமிதென் புதிய உடன் படிக்கை ரத்தமென்று,

            காத்திரமாய்மொழி பகர்ந்தார்; கருதுமைந்து புலனைவென்று

            கர்த்தனடி சேருமவர் காருண்யத்தை யுன்னி இன்று - நற்கரு

 

- சு.ச. எரேமியா

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்



[1] இரத்தம்

[2] கோபமடையாமல்

[3] பகை

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு