24 November 2023

இஸ்ரவேலின் நாதனாக வாழும் ஏக தெய்வம்

இஸ்ரவேலின் நாதனாக வாழும் ஏக தெய்வம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          இஸ்ரவேலின் நாதனாக வாழும் ஏக தெய்வம்

            வழியும் சத்தியம் ஜீவனான தெய்வம்

            மனிதனாய் பூமியில் பிறந்த அன்பின் தெய்வம்

            நித்திய ஜீவன் தந்திடும் என் தெய்வம்

 

                அப்பா பிதாவே தெய்வமே

                உம் திரு ராஜ்யம் வருகவே

                உம் திரு சித்தம் பூமியில்

                என்றென்றும் நிறைவேற வேண்டுமே  -இஸ்ரவேலின்

 

1.         செங்கடலில் நீர் அன்று பாதை வகுத்தீர்

            பாலைவனத்தில் அன்று மன்னா பொழிந்தீர்

            கொடும் வெயிலில் மேக தனலாகி

            இருளின் அன்பின் தீபமாய்

            சீனாய் மலையின் மேலே நீர்

            நீதியின் கட்டளை எடுத்துரைத்தீர்                   -அப்பா பிதாவே

 

2.         மனிதனாய் பூமியில் அவதரித்தீர்

            எனக்காக ஜீவன் பலி கொடுத்தீர்

            உடலும் இரத்தமும் திரு விருந்தாய்

            இவ்வுலகத்தில் ஜீவனாய்

            வழியும் சத்தியமும் ஆனவரே

            உம் திருநாமம் வாழ்த்துகிறோம்            -இஸ்ரவேலின்

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

2 comments:

  1. This was a amazing song for me.

    ReplyDelete
    Replies
    1. தேவனுக்கே மகிமை!

      Delete

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...