17 November 2023

வானம் எனது சிங்காசனம்

வானம் எனது சிங்காசனம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          வானம் எனது சிங்காசனம்

            பூமி எனது பாதபடி

            என்றுரைத்த சர்வ வல்லவரே

            சமுத்திரத்தின் பெருமைகளை

            ஆகாயத்து சேனைகளை ஆளுகின்ற

            சர்வ வல்லவரே - 2

 

                        மகிமை மகிமை மகிமை - உமக்கு (2)

                        மகிமை மகிமை மகிமை உண்டாகட்டும்

 

1.         செங்கடலை பிளந்தவரே

            யோர்தானை நிறுத்தினீரே

            சர்வ வல்ல தேவன் நீரே

            கடலின் மேல் நடந்தவரே

            கடும் புயல் அடக்கினீரே

            மகிமை மகிமை மகிமையுண்டாகட்டும் - வானம்

 

2.         சூரியனையும் சந்திரனையும்

            தரித்து நிற்க செய்தவரே

            சர்வ வல்ல தேவன் நீரே

            ஆர்ப்பரிக்க பெலன் கொடுத்தீர்

            எரிகோவை தகர்த்துப் போட்டீர்

            மகிமை மகிமை மகிமையுண்டாகட்டும் - வானம்

 

3.         குருடனை காணச் செய்தீர்

            செவிடனை கேட்கச் செய்தீர்

            சர்வ வல்ல தேவன் நீரே

            முடவனை நடக்க செய்தீர்

            ஊமையனை பேசச் செய்தீர்

            மகிமை மகிமை மகிமையுண்டாகட்டும் - வானம்

 

- சகோ. டேனியல்ராஜ், HFDM Gods Word

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...