25 November 2023

கன்னி மரியின் மடிதனில் மகிழ்ந்தாடும்

கன்னி மரியின் மடிதனில் மகிழ்ந்தாடும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

                   கன்னி மரியின் மடிதனில்

                   மகிழ்ந்தாடும் மன்னவன்

                        தூதர்கள் துதித்திடும் தேவாதி தேவன்

                        தொழுவத்தில் வந்துதித்தார்

 

                        ஆரிராரோ ஆராரிரோ - (4)

 

 1.        பயப்படாதே என்றுரைத்த பார்போற்றும் பரிசுத்தரே

            கலங்கிடாதே என்றுரைத்த கர்த்தாதி கர்த்தரே

            திகையாதே என்றுரைத்த திரியேக தேவனே

            சத்துருவை சங்கரிக்கும் லோக மீட்பரே

 

 2.        அடிமை வாழ்வை அழிக்கவந்த அற்புத பாலகனே

            அருளின் ஒளியாய் இருளை நீக்கும் நேச தீபமே

            தரணியை மீட்க வந்த சீரேசு நாதனே

            தொல்லை கஷ்டம் நீக்க வந்த தேவ மைந்தனே

 

3.         மாசில்லாத மைந்தனுக்கோ மாணிக்க தொட்டிலில்லை

            மாடடையும் கொட்டினிலே மாமன்னன் உதித்தாரே

            பாவியை இரட்சிக்கவே பரலோகம் விட்டிறங்கி

            பாவம் சாபம் நீக்கிடவே பாரில் உதித்தார்

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...