17 November 2023

என்றைக்கு நீர் வருவீர்

என்றைக்கு நீர் வருவீர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

          என்றைக்கு நீர் வருவீர்

            என் இயேசு ராஜா

            உம் முகம் தரிசிக்க

            ஏங்குகிறேனே.

                        கவலை கண்ணீரெல்லாம்

                        அன்றைக்கு மறைந்திடுமே

                        துயரம் துன்பமெல்லாம்

                        இல்லாமல் போய்விடுமே.

 

1.         பொல்லாத உலகமையா

            நித்தமும் கலக்கமையா

            உம்மோடு இருப்பதுதான்

            எந்தனின் ஏக்கமையா.

 

2.         நிந்தை அவமானங்களை

            சுமந்து இளைத்து போனேன்

            உம் இளைப்பாறுதலில்

            சேர்த்திட வாருமையா.

 

3.         நம்பிக்கை துரோகமதை

            கண்டு மனமுடைந்தேனையா

            ஜீவனை தந்தவரே

            உம் மார்பில் சாயனுமே

 

4.         மனிதனின் மேட்டிமையால்

            நித்தமும் சிறுமையானேன்

            நீதியின் கிரீடமதை

            சூட்டிட வாருமையா.

 

- சகோ. டேனியல்ராஜ், HFDM Gods Word

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...