23 November 2023

கர்த்தரின் திருவிருந்து பக்தியோடதை அருந்து

கர்த்தரின் திருவிருந்து பக்தியோடதை அருந்து

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

                   கர்த்தரின் திருவிருந்து

                        பக்தியோடதை அருந்து

                        ஆயத்தத்தோடின்று

                        அதில் சேர்வதே நன்று

 

1.         சுத்த நல் மனசாட்சி

            இரத்தத்தால் தெளிக்கப்பட்ட

            உத்தம இருதயம் மெத்தவும் அவசியம்

 

2.         தன்னைத்தான் சோதித்து

            தன்னையே நிதானித்து

            இன்று நீர் பங்கு பெறில்

            அன்று நியாயம் தீர்க்கப்படீர்

 

3.         பொல்லாப்பு துர்க்குணம்

            இல்லாமல் அகற்றுவீர்

            துப்புறவு உண்மையுடன்

            இப்போதாசரித்திடுவீர்

 

4.         அப்பம் என் சரீரம்

            இப்பாத்திரம் என் இரத்தமே

            தப்பாது பங்கெடுப்பீர்

            என்றேசு மொழிந்தனரே

 

5.         மெய்யாய் நம் நோய்களை

            மெய்யதினில் சுமந்த அப்பம்

            வாங்கி நீர் புசித்து

            நீங்குவீர் வியாதியினின்றும்

 

6.         ஜீவனின் இரத்தத்தால்

            பாவ மன்னிப்புண்டாம்

            சுத்தமும் ஜீவன் பெற

            இரத்தத்தை பானம் செய்வீர்

 

7.         நமது பஸ்கா இயேசுகிறிஸ்து

            நமக்காக அடிக்கப்பட்டார்

            அதை நினைவுகூரும்படி

            இதைச் செய்வீர் அவர் வருமளவும்

 

https://www.youtube.com/watch?v=wxUmUNGrwMQ

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...