30 November 2023

பரிதி தூங்கிட பாதிரா நேரத்தில்

பரிதி தூங்கிட பாதிரா நேரத்தில்

 

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

(இராகம்: மணமக்கள் மீது மலர்கள் தூவி)

 

                   பரிதி தூங்கிட பாதிரா நேரத்தில்

                        பாரிடை பிறந்தவரே

                        பாவங்கள் போக்கவும் சாபங்கள் நீக்கவும்

                        தரணியில் பிறந்தவரே (2)

 

1.         மயில்கள் ஆடட்டும் குயில்கள் பாடட்டும்

            வானவர் வாயார வாழ்த்திடட்டும் - (2)

            தேவ குமாரா தாவீதின் மைந்தா

            தாழ்மையின் திருவுருவே

            யாகத்தின் திருவடிவே - பரிதி

 

2.         கனிகள் கனியட்டும் மலர்கள் மலரட்டும்

            பரமன் நின் பெருமை புகழ்ந்திடட்டும் (2)

            மாட்டுக்கொட்டிலில் மாபெரும் தேவன்

            மானிடன் ஆனாரே

            மாந்தரை மீட்டிடவே - பரிதி

 

3.         மனிதர் மாறிட மீட்பை பெற்றிட

            மீட்பர் நம் இயேசு பாரில் வந்தார் - (2)

            பாவியை மீட்க பரிசுத்தமாக்க

            பெத்தலையில் பிறந்தார்

            பரலோக மேன்மை விட்டார் - பரிதி

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...