17 November 2023

என் தேவன் எனக்கு அடைக்கலம்

என் தேவன் எனக்கு அடைக்கலம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

                    என் தேவன் எனக்கு அடைக்கலம்

                        அவர் செட்டைதான் எனது புகலிடம்

                        என்றென்றும் என்னை நடத்துவார்

                        அவர் கரத்தில் என்னை தாங்குவார்

 

1.         குயவனின் கையில் களிமண்ணைப்போல்

            நித்தமும் என்னை வனைந்திடுவார்

            மன்னான என்னை மறுரூபமாக்கி

            மகிமையின் சாயலாய் மாற்றிடுவார்

                                    - என்றென்றும் என்னை

 

2.         ஆபத்து காலத்தில் அவரை நோக்கி

            கூப்பிட எனக்கு பதில் கொடுப்பார்

            சாத்தானின் கைக்கு தப்புவித்து

            என்னை இரட்சிப்பின் பாதையில் நடத்துவார்

                                    - என்றென்றும்என்னை

 

3.         நான் நடக்க வேண்டிய வழிகளை காட்டி

            அவரே என்னை நடத்திடுவார்

            என்னை முற்றிலும் பரிசுத்தமாக்கி

            பரலோக இராஜ்ஜியம் சேர்த்திடுவார்

                                    - என்றென்றும் என்னை

 

- சகோ. டேனியல்ராஜ், HFDM Gods Word

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...