கர்த்தருக்கு புதுப்பாட்டை பாடுங்கள்

கர்த்தருக்கு புதுப்பாட்டை பாடுங்கள்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                    கர்த்தருக்கு புதுப்பாட்டை பாடுங்கள்

                        அவர் நமக்கு அதிசயம் செய்திருக்கிறார்

                        அவருடைய வலக்கரமும் பரிசுத்த புயமும்

                        நம்மை இரட்சித்ததே - 2.

 

1.         அவர் நமது இரட்சிப்பை பிரஸ்தாபமாக்கி

            தமது நீதியை விளங்கப்பண்ணினார்

            அவர் தமது கிருபையை நினைவு கூர்ந்தார்

            அவர் தமது உண்மையை நினைவு கூர்ந்தார் - கர்த்தருக்கு

 

2.         சுரமண்டலத்தாலும் கீர்த்தனம் பண்ணுங்கள்

            கீத சத்தத்தாலும் கீர்த்தனம் பண்ணுங்கள்

            ராஜாவின் சமூகத்தில் பூரிகைகளால்

            எக்காள சத்தத்தோடு ஆர்ப்பரியுங்கள் - கர்த்தருக்கு

 

3.         சமுத்திரமும் அதின் நிறைவும் பூச்சக்கரமும்

            அதின் குடிகளும் முழங்குவதாக

            கர்த்தருக்கு முன்பாக ஆறுகளும்

            பர்வதமும் கெம்பீரித்து பாடுவதாக - கர்த்தருக்கு

 

- சகோ. டேனியல்ராஜ், HFDM Gods Word

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு