49. இராகம்: சங்கராபரணம் ஆதிதாளம்
பல்லவி
ஆதாமின்
பாவத்தாலே அரூபன் உருபமான
அதிசயம்
இதோ! பாரும்.
அனுபல்லவி
மாதேவை புத்திர ரான மானிடர் குழாங்களே,
நீர்
வல்லமைப் பிதாவின் ஒரு மைந்தனைச் சந்திக்க
வாரும் - ஆதா
சரணங்கள்
1. ஆதி பிதாவின் கிரு பாசனத்தைத் துறந்தார்;
அழகான மோட்ச செல்வ பாக்கியத்தை மறந்தார்
பாதகந் தீரவேண்டிப் பெத்தலையில் சிறந்தார்;
பராபர வஸ்து வானோர் பாலனாகப் பிறந்தார்
- ஆதா
2. உன்னத வஸ்து வானோர் உலகத்தை நேசித்தார்;
ஒப்பில்லா தேவ தேவன் மனுஷரை ஆசித்தார்;
தன் ஒளிவை விளங்க, தானே பிரகாசித்தார்;
ஜாதிகளுக்குத் தயவாய்; உபதேசித்தார் -
ஆதா
3. மந்தை ஆயர் சந்திக்க, சந்தோடமே விண்டார்,
வான நாட்டைப் பிரிந்து மாட்டுக் கொட்டிலைக்
கண்டார்
விந்தை திருமுதலார்க் கந்தைத் துணியைக்
கொண்டார்
வேத காரணர் தானே மேவி தாயின் பால் உண்டார்
- ஆதா
-
வேதநாயக சாஸ்திரியார்
No comments:
Post a Comment