என் ஆத்துமா அனுதினம் உம்மைத் தேடும்

என் ஆத்துமா அனுதினம் உம்மைத் தேடும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          என் ஆத்துமா அனுதினம் உம்மைத் தேடும்

            என் இயேசுவே அகமகிழ்ந்தும்மைப் பாடும்

            துதி செய்தலே ஏற்றதுவே

            தேன் போன்ற இனிமை என் நாவினிலே

 

                        கர்த்தாவை மகிமைப்படுத்திடுவேன்

                        கனியான ஸ்தோத்திர பலிகளால்

                        நாள்தோறும் தேவ நீதியைச் சொல்லி

                        நேர்மை மனதோடு வாழ்ந்திடுவேன் - என் ஆத்துமா

 

1.         எந்தன் துதி தொனியும் முழங்க

            எரிகோ மதிலும் வீழ்ந்திடுமே

            நாலா திசை கேட்க ஸ்தோத்தரிப்பேன்

            நல்லவர் என தாண்டவர்

 

2.         என் ஸ்தோத்திரம், கருத்தோடு செய்வேன்

            என்னையும் நினைத்தார் என் தாழ்விலே

            தன்னைத் தான் தாழ்த்தினால் உயர்த்துவார்

            சொன்னவர் எனதேசுவே

 

3.         இம்மானுவேல் இதுவே அவர் நாமம்

            எம்மோடிருப்பார் எக்காலமும்

            நித்திய ஜீவனும் சந்தோஷமும்

            நல்கிடும் கிறிஸ்தேசுவே

 

4.         பூவில் ஜனம் துணிவான பாவம்

            பல செய்வதினால் தீர்ப்பைப் பெறும்

            நியாயாதிபதி இயேசு வருகிறார்

            நீதியை நிலை நாட்டுவார்

 

5.         அல்லேலூயா பரலோகக் கூட்டம்

            அல்லும் பகலும் ஓயாமலே

            கர்த்தாவின் நாமத்தில் ஆர்ப்பரிப்போம்

            கிருபை பொழிகின்றதே

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு