13 November 2023

மன்னாதி மன்னவனாம் ராஜாதி ராஜனுமாம்

மன்னாதி மன்னவனாம் ராஜாதி ராஜனுமாம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          மன்னாதி மன்னவனாம் ராஜாதி ராஜனுமாம்

            தேவாதி தேவனுமாம் இயேசு பிறந்தார்

            மாளிகை துறந்தவராம் மாமகிமை வெறுத்தவராம்

            மா மகிழ்ச்சி கொடுக்க வந்த மகிமன் பிறந்தார்

 

                        இம்மானுவேல் இவர் இம்மானுவேல்

                        நம் மீது அன்பு வைத்த இம்மானுவேல்- இயேசு

                        இம்மானுவேல் நம் இம்மானுவேல்

                        நம்மோடு வாழ வந்த இம்மானுவேல்

 

1.         தாழ்மை கோலம் ஏற்றிட்டார் ஏன் தெரியுமா

            ஏழ்மை உருவில் பிறந்திட்டார் ஏன் புரியுமா (2)

            வாழ்விழந்து போன நம்மை வாழ வைக்க

            வான் மகிமை பெற்று வந்த இயேசுவையே

            கொண்டாடி மகிழ்ந்திடுவோமே - இம்மானுவேல்

 

2.         இரட்சகராய் வந்துட்டார் ஏன் தெரியுமா

            இரட்சிப்பையும் வழங்கிட்டார் ஏன் புரியுமா (2)

            பூவுலகின் பாவம் போக்கும்

            தெய்வ ஆட்டு குட்டியான புண்ணியரின்

            நேசமதை கொண்டாடி மகிழ்ந்திடுவோமே - இம்மானுவேல்

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...