இயேசு பிறந்தார் இயேசு பிறந்தார் பூலோக

இயேசு பிறந்தார் இயேசு பிறந்தார் பூலோக

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          இயேசு பிறந்தார் இயேசு பிறந்தார்

            பூலோக ரட்சகராய் இயேசு பிறந்தார் - 2

 

                        ஆ ஆ இது ஆனந்தம்

                        ஓ ஓ இது பேரின்பம் -2 - இயேசு பிறந்தார்

 

1.         வானமே வையமே வான தூதர் கூட்டமே

            வாழ்த்து பாட வாருங்கள் வானவர் இயேசுவை

            ராஜாதி ராஜன் மண்ணில் பிறந்தார் - 2

            இவர் இம்மானுவேல் நம்முடனே இறுதி நாள் வரை கூட இருப்பார் - 2 - ஆ ஆ இது

 

2.         உன்னதத்தில் மகிமையே சமாதானம் பூவிலே

            மனுஷர் மேல் பிரியமாய் தேவாதி தேவன் தான்

            மா மரி மடியிலே இன்று பிறந்தார் - 2

            இவர் ஆலோசனை கர்த்தராகவே மண் மீதிலே மனுவானாரே - 2 - ஆ ஆ இது

 

3.         ஏசாயா வாக்கு தான் இன்று நிறைவேறவே

            இயேசு என்னும் இரட்சகர் தேவாட்டுக்குட்டியாய்

            மண்ணோர் பாவம் போக்கவே வந்து பிறந்தார் - 2

            இவர் பாதம் பணிந்தே மீட்பைப் பெறுவோம்

            கீதம் பாடியே கொண்டாடுவோம் - 2 - ஆ ஆ இது

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு