24 November 2023

இயேசு பிறந்தார் இயேசு பிறந்தார்

இயேசு பிறந்தார் இயேசு பிறந்தார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

பல்லவி

 

          இயேசு பிறந்தார் இயேசு பிறந்தார் (2)

 

சரணங்கள்

 

1.          இன்ப வெள்ளம் புரண்டோட அன்பு வாய்க்கால் நிரைந்தோட

            துன்ப வெற்பு உருண்டோட தொல்லைக்குழி மறைந்தோட

            வன்ம பாவம் மருண்டோட பிறந்தார் பிறந்தார்

                        இயேசு பிறந்தார் இயேசு பிறந்தார்

                        இயேசு பிறந்தார் ஆம் ஆம் ஆம் இயேசு பிறந்தார்

 

2.         வானகத்தோர் பண்ணிசைக்க கானகத்தோர் கானம் கேட்டு

            ஆனந்தத்தால் ஆர்ப்பரித்து ஈனக்கோலம் தானெடுத்த

            வானபரன் வந்து காண பிறந்தார் பிறந்தார்

                        இயேசு பிறந்தார் இயேசு பிறந்தார்

                        இயேசு பிறந்தார் ஆம் ஆம் ஆம் இயேசு பிறந்தார்

 

3.         எவ்வுயிர்க்கும் தந்தையான ஈசனேவோர் சேயனாக

            எவ்வுயிரும் பேயுலகை எய்தக் கூடாதென்று எண்ணி

            செவ்வுயிரை ஈவதற்காய் பிறந்தார் பிறந்தார்

                        இயேசு பிறந்தார் இயேசு பிறந்தார்

                        இயேசு பிறந்தார் ஆம் ஆம் ஆம் இயேசு பிறந்தார்

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...