காலம் பனி காலம் அந்த விண்ணின்

காலம் பனி காலம் அந்த விண்ணின்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          காலம் பனி காலம்

            அந்த விண்ணின் வேந்தர் மண்ணில் பிறந்தார்

            பாலன் இயேசு பாலன் ஒளி மின்ன மின்ன

            கண்கள் மலர்ந்தார்

 

                        பூவிழி மான் என்பேன்

                        புன்னகை தேன் என்பேன் (2) - ஆனந்தம் ஆனந்தமே...

 

1.         பனி சிந்தும் பொன் வானம்

            அதில் மனமெல்லாம் புது கானம்

            இரவென்னும் தனி மௌனம்

            என் மனமெல்லாம் இசை தாளம்

            ஆனந்தம் சொந்தம் கொள்ளும்

            இன்பம் அம்மம்மா ல... ல... (2)

                        தாளங்கள் போடும் நெஞ்சின் ஓசை கேளம்மா

                        பாடுங்கள் ஒன்றாய் நன்றே ஆடுங்கள் அன்பாய் இன்றே (2)

 

2.         அருள் மின்னும் முகம் கண்டால்

            ஒளி மின்னும் நம் உள்ளம்

            விழி பார்வை துளி பட்டால்

            நலம் சேரும் நம் இல்லம்

            சந்தோஷம் போங்க போங்க தங்க தாலாட்டு (2)

 

                        வானோரும் வாழ்த்து சொல்லும்

                        தூதர் இசை பாட்டு

                        அன்பெனும் வேதம் ஒன்றே

                        அனைவரும் மகிழ்வோம் இன்றே (2)

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு