தூங்கு கண்ணே பாலா
தூங்கு
கண்ணே பாலா
தூதர்
பண்ணிசைக்க
பாங்கு
அன்னை மரி
பாலா
நீ உறங்கு
1. கடும் குளிர்
நாளிலே
கந்தை துணி
போர்த்தாயோ
நடு இரவதினில்
நடுங்க
பிறந்தாயோ
பாடும்
பாடலோர் போற்ற
பாவி நான்
என்னச் செய்வேன்
கொடும்
வேதனை நீங்க
கோவை நான்
மார்பனைத்தேன்
2. உன்னதத்தில்
மகிமை
பூலோகில்
சமாதானம்
உயிர்கள்
மேல் பிரியம்
உண்டாக்க
பிறந்தாயோ
உன் அன்பிற்கெல்லையேது
உந்தனுக்கென்ன
செய்வேன்
உடல் உயிர்
பொருளை
உம்முன்
னர்ப்பணம்
செய்வேன்
3. ஈசாயின்
வேர்த்துளிரே
ஈசன் எம்
செல்வரசே!
நேசாயெம்
இயேசு நாதா!
நேசர்கள்
தெய்வரசே!
தாசரெம்
தாபரமெ!
தாசர்கள்
தண்ணரசே!
பாசமுள்ள
பாலகா!
பாவியெம்
பொன்னரசே!
4. இஸ்ரவேலின்
தேவனே!
இனி உறங்கமாட்டீர்!
தாவீதின்
குமாரனே!
தாலாட்டுக்
கேட்கமாட்டீர்!
பூலோக இரட்சகனே!
பூமியில்
தங்கமாட்டீர்!
பாவியின்
சிநேகிதனே!
பாவியைத்
தள்ளமாட்டீர்!
Comments
Post a Comment