23 November 2023

இறுதி இராப் போஜன விருந்திலே

இறுதி இராப் போஜன விருந்திலே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

                   இறுதி இராப் போஜன விருந்திலே

                        இரட்சகர் வீற்றிருந்தார்

                        இயேசு பன்னிரு சீஷருடனே

 

1.         அப்பமதை எடுத்தவர்

            ஆசீர்வதித்ததைப் பிட்டுத் தந்தார்

            எந்தன் சரீரம் இதுவே புசிப்பீர்

            என்றே பரிமாறினார்

 

2.         பாத்திரத்தில் நவரசம்

            பாவத்தை கழுவின தூய இரத்தம்

            இரட்சண்ய புது உடன்படிக்கையே

            இதைப் பானம் பண்ணினார்

 

3.         அன்பின் சீஷன் ஆறுதலாய்

            அண்ணலின் மார்பினில் சாய்ந்திருந்தான்

            துரோகியாம் யூதாஸ் துணிக்கையும் வாங்கி

            தீவிரம் போய் மறைந்தான்

 

4.         சரீரமாய் சபையிலே

            சத்திய ஆவியால் இணைத்தாரே

            நன்றியும் பொங்க நிலைத்து நின்றாலே

            நற்கருணை ஈகுவார்

 

5.         கபடற்ற மனதுடன்

            கிறிஸ்துவின் மன்னிக்கும் சிந்தையுடன்

            சந்தோஷமாக சமாதானமாக

            பந்தியில் பங்கடைவோம்

 

6.         பக்தரோடே சீயோனிலும்

            பிதாவின் இராஜ்ஜய பந்தியிலும்

            வாஞ்சையாய் நாமும் வருகையில் சென்று

            விரைந்து சேர்ந்து கொள்வோம்

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...