20 November 2023

இன்னமும் தாமதம் ஏன்

இன்னமும் தாமதம் ஏன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

          இன்னமும் தாமதம் ஏன்

            இன்ப சத்தம் கேளாயோ

            இன்னலின்றி காத்திட

            இன்றுன்னை அழைக்கிறாரே

 

                        ஜீவனின் அதிபதி இயேசுவண்டை

                        நித்திய ஜீவன் உண்டே

                        நீங்கிடா அவர் அன்பையே

                        நாடி நீ வந்திடாயோ

 

1.         கல்வாரி மேட்டினிலே

            கரங்களை விரித்தவராய்

            காத்துன்னை ரட்சித்திட

            கனிவுடன் அழைக்கிறாரே

 

2.         லோகத்தின் இன்பமெல்லாம்

            மாறிடும் சனப்பொழுதில்

            மாறிடா நேசர் இயேசு

            மாண்புடன் அழைக்கிறாரே

 

3.         நாளை உன் நாள் ஆகுமோ

            நாடாயோ நாதனை நீ

            நாசலோகை விட்டிட

            நாதன் அழைக்கிறாரே

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...