மாமன்னன் மண்ணில் பிறந்தார்
மாமன்னன்
மண்ணில் பிறந்தார்
மாமேன்மை
யாவும் துறந்தார்
-2
மண்ணகம்
மகிழவே
விண்ணகம்
வாழ்த்தவே-2
1. பாவத்தினால்
மரித்த நம்மையே
கிருபையால்
இரட்சித்து
உயர்த்தினார்-2
பாவம் சாபம்
நீக்கிடவே
பரிகாரம்
செய்திடவே
பரலோகம்
விட்டு மண்ணில்
உதித்தார்-2
2. இருளில்
இருக்கும் ஜனங்களில்
வெளிச்சம்
வந்து உதித்தது-2
தம்மைத்
தாமே வெறுமையாய்
அடிமையின் ரூபமாக்கி
மனுஷ
சாயலாக மண்ணில்
உதித்தார்-2
3. உலகத்தின்
இரட்சகர்
இயேசுவே
சமாதான
காரணர் அவர்
தாமே -2
பயம் நீக்கி
சந்தோஷத்தை
நிறைவாக தந்திடவே
தம்மை பலியாக்கி
மண்ணில் உதித்தார்-2
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment