மண வாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு

மண வாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

பல்லவி

 

            மண வாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு - மங்கள வாழ்வு

            மருவிய சோபன சுப வாழ்வு

 

சரணங்கள்

 

1.         துணை பிரியாது, தோகையிம்மாது

            சுப மண மகளிவர் இதுபோது

            மணமுறை யோது வசனம் விடாது

            வந்தன ருமதருள் பெறவேது, - நல்ல                - மண

 

2.         ஜீவ தயாகரா, சிருஷ்டியதிகாரா,

            தெய்வீக மாமண வலங்காரா

            தேவ குமாரா திருவெல்லையூரா

            சேர்ந்தவர்க்கருள் தராதிருப்பீரா? - நல்ல        - மண

 

3.         குடித்தன வீரம், குணமுள்ள தாரம்,

            கொடுத்துக் கொண்டாலது சமுசாரம்

            அடக்கமாசாரம், அன்பு, உதாரம்

            அம்புவி தனில் மனைக்கலங்காரம் - நல்ல       - மண

 

4.         மன்றல் செய் தேவி, மணாளனுக்காவி

            மந்திரம் அவர்குறை மேதாவி

            மன்றியிப் பூவி லமிர்த சஞ்சீவி;

            அவளையில்லாதவ னொரு பாவி - நல்ல          - மண

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு