24 November 2023

சத்திரத்தை தேடி வாருங்க

சத்திரத்தை தேடி வாருங்க

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   சத்திரத்தை தேடி வாருங்க

                        சந்தோஷமாய் ஆர்ப்பரித்து ஒன்று கூடுங்க

                        சாலேமின் ராஜனையே பார்க்க வாருங்க - 2

                        மேலாக ராஜன் இவர் மேன்மை விட்டு வந்தாரே

                        பூலோக மாந்தரின் பாவம் நீக்க வந்தாரே - 2

                        மகிமையின் ராஜனிவர் மகத்துவ தேவனிவர்

                        மண்ணின் மீட்பரிவர் மனுவுருவானார் - 2

 

1.         காட்டுக்குள்ளே பாட்டு கேக்குது

            கேட்டு கேட்டு ஆயர் கூட்டம் பாட்டு பாடுது

            ஆடுகளும் துள்ளி துள்ளி தலையை ஆட்டுது - 2

            வாருங்கள் மேய்ப்பரே நாம் பெத்தலகேம் செல்வோம்

            வானம் விட்டு பூமி வந்த மேசியாவை காணுவோம் - 2

            பெத்தலையின் சத்திரத்திலே மாடடையும் குளிரினிலே

            மரியன்னை மடிதனிலே மன்னனை கண்டார் - 2

 

2.         உன்னை மீட்க இயேசு வந்தாரே

            பாவியாம் என்னை மீட்க இயேசு வந்தாரே

            பாரிலே நம்மை மீட்க இயேசு வந்தாரே - 2

            மாசில்லா பாலனை போற்றி போற்றி பாடுவோம்

            மாறிடா அன்பினை உலகமெங்கும் சொல்லுவோம் - 2

            இவரே இரட்சகராம் இவரே வல்லவராம்

            இவரே பரிசுத்தராம் என்றே பாடுவோம் - 2

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...