01 November 2023

சேனைகளின் கர்த்தர் நல்லவரே

சேனைகளின் கர்த்தர் நல்லவரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

          சேனைகளின் கர்த்தர் நல்லவரே

            சேதமின்றி நம்மைக் காப்பவரே

            சோர்ந்திடும் நேரங்கள் தேற்றிடும் வாக்குகள்

            சோதனை வென்றிட தந்தருள்வார்

 

                        எக்காலத்தும் நம்பிடுவோம்

                        திக்கற்ற மக்களின் மறைவிடம்

                        பக்க பலம் பாதுகாப்பும்

                        இக்கட்டில் இயேசுவே அடைக்கலம்

 

1.         வெள்ளங்கள் புரண்டு மோதினாலும்

            உள்ளத்தின் உறுதி அசையாதே

            ஏழு மடங்கு நெருப்பு நடுவிலும்

            இயேசு நம்மோடு நடக்கின்றார்

 

2.         ஆழத்தினின்றும் நாம் கூப்பிடுவோம்

            ஆத்திரமாய் வந்து தப்புவிப்பார்

            கப்பலின் பின்னணி நித்திரை செய்திடும்

            கர்த்தர் நம்மோடுண்டு கவலை ஏன்?

 

3.         காத்திருந்து பெலன் பெற்றிடுவோம்

            கர்த்தரின் அற்புதம் கண்டிடுவோம்

            ஜீவனானாலும் மரணமானாலும்

            நம் தேவனின் அன்பில் நிலைத்திருப்போம்

 

4.         இயேசு நம் யுத்தங்கள் நடத்துவார்

            ஏற்றிடுவோம் என்றும் ஜெயக்கொடி

            யாவையும் ஜெயித்து வானத்தில் பறந்து

            இயேசுவை சந்தித்து ஆனந்திப்போம் 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...