01 November 2023

சேனையின் அதிபதியே யுத்தத்தில் வல்லவரே

சேனையின் அதிபதியே யுத்தத்தில்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

          சேனையின் அதிபதியே

            யுத்தத்தில் வல்லவரே

            எந்தனின் கன்மலையே

            ஜெயம் கொடுப்பவரே

 

                        உம்மாலே இயேசுவே உம்மாலே

                        எதிரியின் சேனைக்குள்ளே பாய்ந்திடுவேன்

                        உம்மாலே இயேசுவே உம்மாலே

                        எதிரியின் தடைகளை தாண்டிடுவேன் (2)

 

1.         விரல்களை யுத்தத்திற்கு பழக்குமையா - எந்தன்

            கரங்கள் போருக்கு ஆயத்தமே

            எதிரியின் திட்டங்களை அறிந்திடச் செய்யும்

            உந்தன் நாமத்தால் வீழ்த்திட செய்யும்; - உம்மாலே

 

2.         யோசுவாவின் சேனைகள் புறப்படுதே

            எரிகோவின் மதில்களை தகர்த்திடவே

            துதியின் எக்காளம் முழங்கியே நாங்கள்

            உந்தன் நாமத்தால் சுதந்தரிப்போமே - உம்மாலே

 

3.         கிதியோனின் பட்டயம் எந்தன் கரங்களிலே

            உந்தனின் பட்டயமாய் மாற்றிடுமே

            இருக்கும் பலத்தோடு புறப்படுவோம் நாமே

            இயேசுவின் நாமத்தால்ஜெயமெடுப்போமே - உம்மாலே

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...