01 November 2023

சேனைகளின் தேவனை சிங்காரமாய்

சேனைகளின் தேவனை சிங்காரமாய்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

          சேனைகளின் தேவனை

            சிங்காரமாய் பாடுவோம்

            செங்குருதி சிந்தி நம்மை

            மீட்டவரை பாடுவோம்

 

                        பாடுவோம் ராகதேவன்

                        இயேசுவை பாடுவோம்

                        பாடுவோம் பாவேந்தன்

                        இயேசுவை பாடுவோம்

 

1.         ஒருவராய் பெரிய அதிசயம் செய்யும்

            ஆண்டவர் இயேசுவை பாடுவோம்

            ஒன்றும் இல்லாமல் உலகத்தை படைத்த

            உன்னதர் இயேசுவை பாடுவோம்

 

2.         சூரியனை ஒரு நாள் மறைய விடாமல்

            இறுத்திய இயேசுவை பாடுவோம்

            இடியோசைக்கும் மின்னல் மழைகளுக்கும்

            வழி சொல்லும் இயேசுவை பாடுவோம்

 

3.         எவருமே பூட்டக் கூடாதபடிக்கு

            திறக்கிற தேவனைப் பாடுவோம்

            ஒருவரும் திறக்கக் கூடாதபடிக்கு

            பூட்டுகிற வேந்தனைப் பாடுவோம்

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...