வானவர் பிறந்தார் பிறந்தார்
வானவர்
பிறந்தார் பிறந்தார்
வானவர்
- வானவர் பிறந்தார்
(2)
ஆத்துமா
கர்த்தரை துதிக்கின்றதே
என் ஆவியும்
களிக்கின்றதே
அவர் தமதடிமையின்
தாழ்மையை பார்த்தார்
அவரால்
பாக்கியமானேன்
(2)
அவர்
நாமம் தூயவர்,
வல்லமையானவர்
- வானவர்
1. தேவ இரக்கம்
பயந்தவர்களுக்கு
தலை தலைமுறைக்கும்
உண்டு
தமது புயத்தால்
பராக்ரமம்
செய்தார்
அகந்தை
சிதருண்டது
(2)
தேவ நாமம்
தூயவர், வல்லமையானவர்
- வானவர்
2. அவர் சொன்ன
படியே ஆபிரஹாமின்
சந்ததிக்கும்
இரக்கம் செய்தார்
நம்மையும்
மீட்டு ரட்ச்சிக்க
வந்தார்
இயேசு பாலனாக
(2)
அவர்
நாமம் தூயவர்,
வல்லமையானவர்
- வானவர்
Comments
Post a Comment