03 November 2023

அக்கினியில் நடந்து வந்தோம்

பாடல்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Youtube Link

 

Text file Download

 

 

 

 

1.       அக்கினியில் நடந்து வந்தோம்

            ஆனால் சேதம் ஒன்றும் இல்லையப்பா

            தண்ணீரைக் கடந்து வந்தோம்

            நாங்கள் மூழ்கிப் போகவில்லையப்பா

            உங்க கிருபை எங்களை விட்டு

            இமைப்பொழுதும் விலகலப்பா

 

                        எங்கள் தேவன் நீர் எங்கள் ராஜா நீர்

                        நாங்கள் போற்றிடும் கன்மலை நீர்

 

2.         செங்கடலை நீர் பிளந்தீர்

            செம்மையான பாதை தந்தீர்

            எரிகோவின் கோட்டைகளை

            உம் யோசனையால் தகர்த்தீர்

            கோலியாத்தின் கோஷங்களை

            ஒரு நொடியில் வென்றுவிட்டீர் - எங்கள் தேவன்

 

3.         பலவித சோதனையால்

            புடமிடப்பட்டோம் ஐயா

            பொன்னாக மாற்றிவிட்டீர்

            புது இருதயம் தந்து விட்டீர்

            எங்கள் தலையை எண்ணையினால்

            அபிஷேகம் செய்து விட்டீர் - எங்கள் தேவன்

 

4.         வருடங்களை உமது

            கிருபையினால் கடந்தோம்

            இனிவரும் நாட்களெல்லாம்

            உந்தன் மகிமைதனைக் காண்போம்

            எங்கள் ஆயுள் உள்ளவரை

            இயேசு நாமத்தை உயர்த்திடுவோம் - எங்கள் தேவன்

 

 

- Pr. R. Reegan Gomez;

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...